English Tamil Malay

கோலாலம்பூர் டிச 6
கூட்டரசு பிரதேச சிறார்களுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 229 மாணவர்கள் வெற்றிகரமாக பங்கு பெற்றதாக கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலேந்திரன் கூறினார்.

நேற்று இன்று புக்கிட் ஜாலில் உள்ள தேசிய விளையாட்டு மன்றத்தின் மினி அரங்கில் இந்த போட்டிகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
7 முதல் 11 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இந்த போட்டிகளில் கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த 25 ஆரம்பப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

80 மீட்டர், 150 மீட்டர், 1200 மீட்டர், 800 மீட்டர் மெது நடை, 4 × 100 , நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு வீசுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட்ட இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வமாக பங்கு பெற்றதாக அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 தாக்கத்தை கருத்தில் கொண்டு எஸ்ஓபி நிபந்தனைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு இந்தப் போட்டிகள் நடைபெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த போட்டிகளை 18 பயிற்சியாளர்கள், 30 அதிகாரிகள் மற்றும் 20 தொண்டூழியர்கள் வழி நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த போட்டிகளை வெற்றியடையச் செய்த அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறுவதாக டத்தோஸ்ரீ புலேந்திரன் தெரிவித்தார்.

கூட்டரசு பிரதேச கோலாலம்பூர் ஓட்டப்பந்தய சங்கம் மைலோ மற்றும் கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் ஆகிய தரப்பினருடன் இணைந்து இந்த போட்டி நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *