English Tamil Malay

சிலங்கூர் டிச 5நான் சமீபத்தில் செகாம்புட்டிலுள்ள ஒரு மசூதிக்கு சென்றிருந்தபோது என் தலையை மறைக்க துணியிலான செலண்டாங் அணிந்ததால் அது கு‌றி‌த்து கடந்த சில நாட்களாக ஒரு சிலர் விமர்சித்தும் பலர் எனக்கு ஆதoரவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு வழிபாட்டுத் தலத்தில் நான் என் தலையை மறைப்பதன் முக்கியத்துவத்தை அறியாதவர்களுக்கு இந்த அறிக்கையின் வழி தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

மசூதிகள் தவிர, குதுவாரா போன்ற சில வழிபாட்டுத் தலங்களிலும் ஆண்,பெண் இரு பாலரும் தங்கள் தலையை மறைக்க வேண்டும். சில தேவாலயங்களிலும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

நாம் வணங்குபவர்கள் முன்னிலையில் நம் தலையை மறைக்கும் செயலானது அவர்களுக்கான மரியாதையை வெளிப்படுத்துவதாகும்.

இது மிகவும் உயரிய பண்பாகும்.மேலும், நாம் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும்போதும் இது மிகவும் பொருந்தும். செகாம்புட் மற்றும் சுபாங் ஜெயா போன்ற பல இன மக்கள் வாழும்  தொகுதிகளில் 13 ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற வகையில், நான் எனது தொகுதிகளுக்குச் செல்லும் போது இச்செயலை எப்போதும் மரியாதை நிமித்தமாக கடைப்பிடித்து வருகிறேன்.

இச்செயலை கு‌றி‌த்து யார் என்னை விமர்சித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கடைப்பிடிப்பேன்.

மிதமான மலேசியாவுக்கான நமது உரிமையை நாம் எப்போதும் நிலைநாட்ட வேண்டும். மலேசியா நம் அனைவருக்கும் சொந்தமான நாடாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்களை மதித்து, உங்கள் அண்டை வீட்டாரிடம் கருணை காட்டுங்கள். சுயநலமே பேரழிவுக்கான செய்முறை. மிதவாத மலேசியர்களின் குரல் நம் பணியிடங்கள், நம் சுற்றுப்புறங்கள், நம் குடும்பச் சந்திப்புகள், நம் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

மசூதியில் முக்காடு அணிவதால் என் இனம்  மற்றும் மதம் மாறவில்லை.  இந்த இரண்டில் சிறந்தவற்றை நிலைநிறுத்துவதில் என் நம்பிக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இவை தான் பைபிளில் உள்ள கட்டளைகள் மத்தேயூ புத்தகத்திலும் காணப்படுகின்றன. 22 : 36-40 (36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38  இது முதலாம் பிரதான கற்பனை. 39  இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40  இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.ஹன்னா இயோ
செகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர்


 106 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *