English Tamil Malay

லாபிஸ் டிச 4
இங்குள்ள கந்தசாமி ஆலய கும்பாபிஷேக கொண்டாட்டத்திற்கு பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் வெ 1000 நன்கொடை வழங்கினார்.

கந்தசாமி ஆலய நிர்வாக உறுப்பினர்கள் இன்று அந்த ஆலயம் கும்பாபிஷேக கொண்டாட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை இன்று காலை டாக்டர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினர்.

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு முன்னாள் ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர்,1000 வெள்ளி நன்கொடை கான காசோலையை வழங்கினார்.

ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்கு மாநில அரசாங்கம் கூடுதல் நிதி உதவியை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் 19 தாக்கத்தால் மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

 30 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *