English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் டிச 4
நாட்டை வழிநடத்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு 3 சிறப்பு ஆலோசகர்கள் அவசியம்தானா என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கேள்வி எழுப்பினார்.

3 சிறப்பு ஆலோசனைகளுக்கு மாதமொன்றுக்கு வெ 150,000.00 அரசாங்கம் செலவிட வேண்டும். ஒவ்வொரு ஆலோசகர் இருக்கும் வெ 50,000 சம்பளமாக வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பணம் இஸ்மாயில் சப்ரியின் சொந்த பாக்கெட்டிலிருந்து வரும் பணமாக இருந்தால் எனக்கு ஆட்சேபம் தமக்கு ஆட்சேபம் ஏதும் இல்லை என்றார் அவர்.

ஆனால் வரி செலுத்துபவர்களின் அரசாங்க பணம் விரையம் செய்யப்படுவதாக அவர் சாடினார்.
ஏற்கனவே 4 சிறப்பு தூதர்கள் நியமனம் குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது மேலும் 3 சிறப்பு ஆலோசகர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நடப்பு பொருளாதார நெருக்கடியில் இதுபோன்ற நியமனங்கள் அவசியம்தானா என்பதை பிரதமர் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மலேசிய குடும்பம் என்ற சித்தாந்தத்தை பேசிவரும் இஸ்மாயில் சப்ரி, சிறப்பு ஆலோசகர்கள் நியமனம் குறித்து சற்று சீர்தூக்கி பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்யாததால் சிறப்பு ஆலோசகர்களை பிரதமர் நியமனம் செய்துள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளதாக ராமசாமி தெரிவித்தார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *