English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் டிச 2
மாநில ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு ஆசிய மேம்பாட்டு வங்கியிடமிருந்து (ஏடிபி) வெ 21 கோடி கடன் உத்தரவாதத்திற்கு மத்திய அரசாங்கம் மறுத்து வருவதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கீர் ஜொகாரி கூறினார்.

மாநில அரசாங்கம் இந்த கடனை பெற மத்திய அரசாங்கம் மறுத்து வருவதற்கான காரணம் எதுவும் தரப்படவில்லை என்றார் அவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் பாரிசில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் போது இந்த கடனை வழங்க ஏடிபி வங்கி இணக்கம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் மாநில அரசாங்கம் இந்த கடனை பெறுவதற்கு மத்திய அரசாங்கம் தான் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றார் அவர்.

ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் மத்திய அரசாங்கம் அலட்சியமாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

பினாங்கு அரசாங்கத்தின் இந்த 21 கோடி வெள்ளி கடன் விண்ணப்பத்திற்கு மத்திய அரசாங்கம் உத்தரவாதம் தர முடியாது என கடந்த ஆண்டு டிசம்பரில் நிதி அமைச்சு கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

 30 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *