English Tamil Malay

ஜொகூர் டிச 2

ஓட்டுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் வாக்களிக்கும் உரிமையும், வேட்பாளர் உரிமையும் 21 வயது பூர்த்தியானவர்களுக்கும் 21 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் கூறினார்.

ஆனால், அடுத்த ஆண்டு தேர்தல்களில் 18 வயதினர், வேட்பாளராகவும் நிற்கவும் மற்றும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையும் பெற்றுள்ளார்கள். இது அரசாங்கம் நம் இளைஞர்களுக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை நம் இந்திய இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்தல்களில் வாக்களிக்க போகும் நம் இந்திய இளைஞர்கள், முதலில் நம் நாட்டு நடப்புகளை அறிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு எந்த கட்சிகள் ஆட்சி செய்து, அவர்களிடம் புதிய சிந்தனைகள் உள்ளதா, புதிய கொள்கைகள் உள்ளதா என்பதை வாக்களிக்கும் முன் மதிப்பிட வேண்டும். நம் இளைஞர்கள் மாற்றத்தையும் புதிய சிந்தனைகளையும் விரும்பக்கூடியவர்கள் வரவேற்க கூடியவர்கள். ஆகையால், நம் வாக்களிக்க தேர்ந்தெடுக்கும் கட்சிகளும் புதிய சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்ட கட்சிகளாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அடுத்தாக, நம் நாடு மூவின மக்கள் வாழும் நாடு என்பதால் நம் இளைஞர்கள், மூவினங்களும் ஒருங்கிணைந்த கட்சிகளை தேரந்தெடுக்க வேண்டும். ஒரு இனம் ஒரு மதக் கொள்கையை கொண்ட கட்சிகளை தேர்ந்தெடுக்காமல், மூவினம் ஒருங்கிணைந்த கட்சியை தேர்ந்தெடுப்போம். அப்போதுதான், மூவினங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும். நாட்டில் நமது உரிமைகளையும் நிலைநாட்ட முடியும்.

மேலும், இளைஞர்கள் வாக்களிக்கும் கட்சி நமக்கு முறையான சலுகைகளும் உரிமைகளும் தரக் கூடிய கட்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நம் நாட்டில் ஒரு இனம் ஒரு மதக் கொள்கை, தீவிரமாகி வருகிறது. இதன் விளைவாக, மற்ற இனங்களுக்கான உரிமைகள் பல பறிக்கப்பட்டுள்ளன. இதில் பரிதாபமான நிலையில் இருப்பது நம் இந்தியர்கள்தான். நன்கு படித்த பட்டதாரிகளாக இருந்தாலும், நம் இந்திய மாணவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளும் முதன்மை பதவிகளும் கிடைப்பதில்லை. அதுமட்டுமா, நம் இந்தியர்களின் மொழி, கலை, கலாச்சாரங்கள் மறைக்கப்பட்டது மட்டுமல்லாமல், அழிக்கவும் பட்டுக்கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய உணவுகளை அவர்களுடையது என உரிமை கொண்டாடி கொள்வதோடு மட்டுமல்லாமல் மலேசியாவில் தாய் மொழி பள்ளிகளை இல்லாமல் செய்து நம் இனத்தின் மொழியையும் அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இறுதியாக, வாக்களிக்கும் ஒவ்வொரு 18 வயது இளைஞர்களும், நாட்டு நடப்பையும் நம் உரிமைகளையும் கருத்தில் கொண்டு வாக்களிப்போம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் கூறினார்.

  
     

 52 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *