English Tamil Malay

நிபோங் திபால் டிச 1-
பினாங்கு சிலம்ப போர்களை இயக்கம் நிபோங் திபால் அறிவியல் பல்கலைக்கழக இந்திய மாணவர்களுடன் இணைந்து மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது.

இந்த மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் நிகழ்வு வரும் நவம்பர் 27 சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நிபோங் திபால் இந்திய சமூக மண்டபத்தில் நடைபெற இருப்பதாக பினாங்கு சிலம்பு போர்களை இயக்கத்தின் தலைவர் மாஸ்டர் கவிக்குமார் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜாவி வட்டாரத்தை சேர்ந்த தமிழ் பள்ளிகளின் 50 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும் என்றார் அவர்.
பைராம் தமிழ் பள்ளி, சங்காட் தமிழ் பள்ளி, கிரியான் தமிழ் பள்ளி மற்றும் ஜாவி தமிழ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இந்த உதவிப் பொருட்கள் பி40 பிரிவைச் சார்ந்த இந்திய குடும்பங்களின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

 50 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *