English Tamil Malay

குவாந்தான் டிச 1
பகாங் மாநில மக்கள் சக்தி கட்சியின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றதாக கட்சியின் மாநிலத் தலைவர் கணேஸ்வரன் கூறினார்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தலைமையில் எஸ்ஓபி நிபந்தனைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றதாக அவர் கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முன்கூட்டியே ஆன்லைன் மூலம் தங்களை பதிவு செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே மலேசிய மக்கள் சக்தி கட்சி இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் உதவி வருவதாக கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் தமது உரையில் கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் அபார வெற்றி நமக்கு கிடைத்த நற்செய்தி என அவர் குறிப்பிட்டார்.

வரும் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு மக்கள் சக்தி கட்சி கடுமையாக பாடுபட்டு வரும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த கொண்டாட்டத்தில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஆர்.கே ரமேஷ், பகாங் மசீச உதவித் தலைவர் கெல்வின் பேங், மக்கள் சக்தி கட்சியின் மாநில தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

 86 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *