English Tamil Malay

கோலாலம்பூர் டிச 1-கடந்த 32 ஆண்டுகள் மலேசியக் கிண்ணத்தை வெல்லக் காத்திருந்த கோலாலம்பூர் சிட்டி அணி நேற்று நடந்த மலேசியக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜோகூர் ஜேடிதி அணியை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று சாதனை படைத்து.

1989 ஆம் ஆண்டு மலேசியக் கிண்ணத்தை இறுதியாக வென்ற கேஎல் சிட்டி அணி அடுத்த பருவத்தில் தொடங்கும் ஆசியக் கிண்ணப் போட்டிக்கு நாட்டை பிரதிநிதித்து விளையாடும் அறிய வாய்ப்பை பெற்றுள்ளதால்,அதன் ரசிகர்கள் உற்சாகத்தில் தங்களின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நேற்று இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் மலேசியக் கிண்ண இறுதியாட்டம் 20,000 இரசிகர்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 0-0 இருந்த நிலையில்,65 வது நிமிடத்தில் சக ஆட்டக்காரர் ஜே.பார்த்திபன் கிடைத்த பந்தை லாவகமாக கோலாக்கினார் கேஎல் சிட்டி அணியின் ஆட்டக்காரர் சஃஹ்ப்ரி யஹாயா.

இரண்டு அணிகளுக்கிடையே பலமான ஆட்டத்துடன் தாக்குதல் நடத்தப்பட்ட வேலையில் 74 வது நிமிடத்தில் கேஎல் சிட்டியின் கெப்டன் போவ்லோ ஜேசு இரண்டாவது கோலை அடித்துப் பல ஆண்டுகள் மலேசிய்கிண்ணத்தை வெல்லும் கனவை நனவாக்கினார்.

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *