English Tamil Malay

கோலாலம்பூர் நவ 30
கோவிட் 19 தொற்றின் காரணமாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் மரணம் அடைந்தார்.

சுமார் மூன்று வாரங்களாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 54 வயதுடைய அந்த அதிகாரி சிகிச்சை பயன் அளிக்காமல் நேற்று மரணமடைந்ததாக கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா சுகாதார இயக்குனர் டாக்டர் பரம் ஜிட் சிங் கூறினார்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு அந்த அதிகாரி கடுமையான நோய் எதையும் எதிர் நோக்கவில்லை என்றார் அவர்.
கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் இருமல் மற்றும் காய்ச்சலை தொடர்ந்து நவ 8 ஆம் தேதி அந்த அதிகாரிக்கு கோவிட் 19 தொற்று உறுதி படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து நவ 9 ஆம் தேதி கோவிட் 19 நான்காம் கட்ட நிலையில் அந்த அதிகாரி கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றார் அவர்.

அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சென்று திரும்பி வந்த அந்த அதிகாரி எம்பிக்கள் மற்றும் செனட்டர்கள் யாரையும் சந்திக்க வில்லை என அவர் சொன்னார்.

 38 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *