English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா நவ 29
1எம்டிபி ஊழல் தொடர்பாக பேங் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தார் அஜிஸ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்போதைய சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் விளக்கம் தர வேண்டும் என பாக்காத்தான் ஹராப்பான் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.

1எம்டிபி ஊழலில் ஜெட்டியின் பங்கு எப்போதும் பேசப்பட்டு வந்ததாக கூறியுள்ள தோமி தோமஸ், இந்த விவகாரத்தில் ஏன் மௌனம் கடைப்பிடித்து வந்துள்ளார் என அவர் கேள்வி எழுப்பினார்.
பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்க ஆட்சியில் 20 மாதங்களாக சட்டத்துறை தலைவராக பதவி வகித்த தோமி தோமஸ் ஏன் இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் வினவினார்.

ஜெட்டி மற்றும் அவரது கணவர் தௌபிக் அய்மான் தலைமறைவாக இருந்து வரும் கோடீஸ்வரர் ஜோ லோவிற்கு எப்போதுமே உடந்தையாக இருந்து வந்துள்ளனர் என அண்மையில் ஒரு பேட்டியில் தோமி தோமஸ் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் தௌபிக் அய்மானுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் குறைந்தது 65 மில்லியன் வெள்ளி 1எம்டிபி பணத்தை பெற்றதாக அண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அம்பலப்படுத்தியது.

அந்த சமயத்தில் பேங்க் நெகாரா கவர்னராக ஜெட்டி பதவி வகித்தார்.
இதனிடையே இந்த ஊழலை அறிந்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தோமி தோமஸ் கண்டும் காணாமலும் இருந்து விட்டதாக சார்ல்ஸ் சாடினார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *