English Tamil Malay

பெட்டாலிங் ஜெயா நவ 29
கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்கள் கடுமையாக உயர்ந்ததால் மக்களின் குமுறலை தொடர்ந்து, தம்மை பிரதமரின் ‘பயனீட்டாளர் ஆலோசகராக’ நியமனம் செய்யும்படி
மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ மாரிமுத்து நடேசன் பரிந்துரைத்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதில் உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு தோல்வி கண்டுள்ளது, இந்த விவகாரத்தை கையால பிரதமர் அதிகரித்துவரும் ஆலோசகர்களில் மற்றுமொருவர் தேவையான தாம் கருதுவதாக அவர் சொன்னார்.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் பல ஆலோசகர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 55,000 வெள்ளி சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தில் வேலை செய்ய தாம் தயார் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய பொருட்கள் வானுயர வெளியேற்றம் கண்டுள்ளது குறித்து மக்களிடமிருந்து மலேசிய பயனீட்டாளர்கள் சங்க சம்மேளனம் அதிகமான புகார்களை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது. மக்கள் எங்களிடம் புகார் செய்கின்றனர். ஆனார் வர்த்தகர்களை சோதனையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் சந்தைகளுக்கு நேரில் சென்று விலை உயர்வை கண்டறிய வேண்டும்.
பொருட்களின் வெளியேற்றம் குறித்து வாயளவில் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது என மாரிமுத்து தெரிவித்தார்.

சீனாவிற்கான சிறப்பு தூதராக பிந்துலு எம்பி தியோங் கிங் சியோங், கிழக்காசிய சிறப்பு தூதராக சிரியான் எம்பி ரிச்சர்ட் ரியோட், மத்திய கிழக்காசிய சிறப்பு தூதராக பாஸ் தலைவர் ஹாடி அவாங் மற்றும் தென் ஆசியா சிறப்பு தூதராக மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் ஆகியோரை பிரதமர் நியமனம் செய்துள்ளார்.

 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *