English Tamil Malay

Lசுபாங் நவ 29
இங்குள்ள கம்போங் பாரு சுபாங் பாஞ்சாங் வீடுகள் இன்று உடை படுவதிலிருந்து தடுக்கப்பட்டது.
தாங்கள் குடியிருக்கும் வீடுகளை உடைக்க டானியா எமாஸ் நிறுவனம் குண்டர் கும்பல் உதவியுடன் வந்ததாக இங்கு குடியிருக்கும் முத்து என்பவர் கூறினார்.

கடந்த இருபத்தி ஏழு ஆண்டுகளாக சுமார் 118 குடும்பங்கள் இந்த ரூமா பாஞ்சாங் வீடுகளில் வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தாங்கள் குடியிருக்கும் நிலத்தை வாங்கிய டானியா எமாஸ் நிறுவனம், நீதிமன்ற உத்தரவை பெறாமலும் நகராண்மை கழக அனுமதி பெறாமலும் தங்களின் வீடுகளை உடைக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று குண்டர் கும்பலுடன் வந்த அந்த நிறுவன அதிகாரிகள் தங்களின் வீடுகளை காலி செய்யுமாறு வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அந்த குண்டர் கும்பலில் முயற்சியை தாங்கள் தடுத்து நிறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த ரிஷப் நிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக தாங்கள் வசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த இடத்தை காலி செய்யும்படியும் தங்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை கட்டி தருவதாகும் டானியா எமாஸ் நிறுவனம் பல பொய் வாக்குறுதிகளை கூறி வந்ததாக அவர் சொன்னார்.
மற்றொரு இடத்தில் வீடுகளை கட்டி தருவதற்கு வங்கி கடன்களை தாங்கள் பெற்றுத் தந்ததாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த வீடுகளையும் முறையாக கட்டித் தரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் சிவராசா மற்றும் கங்காதரன் தங்களுக்கு உதவி வருவதாக முத்து தெரிவித்தார்.

 40 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *