English Tamil Malay

கோலாலம்பூர் நவ 29-பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு மேலும் ஒரு ஆலோசகர் எதற்கு என பாக்காத்தான் ஹராப்பான் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பினார்.

இஸ்மாயில் சப்ரியின் சமய விவகார ஆலோசகராக கெடா அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஜாமில் கீர் பஹாருமின் நியமனம் வெறும் பணம் விரயமே என்றார் அவர்.

பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்க அமைச்சர்கள் இருக்கும் பட்சத்தில் அதிக செலவிலான ஆலோசகர்கள் எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை இது நோக்கி வரும் வேளையில் இது போன்ற நியமனங்கள் தேவையில்லாத சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு மாதமும் பிரதமரை ஒரு ஆலோசகருக்கு ஊழியர்கள் உட்பட வெ 50,000 செலவிடப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே இஸ்மாயில் சப்ரிக்கு எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செனட்டர் இட்ரிஸ் அமாட்டை சமய விவகார அமைச்சராக இஸ்மாயில் சப்ரி நியமனம் செய்துள்ளார்.

அப்படியானால் தமது அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் பிரதமர் ஆலோசகர்களை நியமனம் செய்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் சட்டம் மற்றும் மனித உரிமைகள் ஆலோசகராக பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸாலினா ஒத்மானை பிரதமர் நியமனம் செய்துள்ளார்.

இந்த விவகாரங்களில் கவனத்தை செலுத்துவதை விட கோவிட் 19 தாக்கத்தால் நலிவடைந்துள்ள நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பிரதமர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என லிம் ஆலோசனை கூறினார்.

 202 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *