English Tamil Malay

சிம்பாங் ரெங்காம் நவ 27
முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் அதிகாரபூர்வமாக பிகேஆரில் இணைந்தார்.

இன்று சிம்பாங் ரெங்காமில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நமது உறுப்பினர் பாரத்தை சமர்ப்பித்தார்.
நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நமக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக தமது உரையில் சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

குறிப்பாக இளைஞர்கள் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் உறுப்பினர் அட்டையை மஸ்லியிடம் அன்வார் வழங்கினார்.

தாம் தமது குடும்பத்தினர் உட்பட 500 பேர் இன்று பிகேஆரில் இணைந்ததாக மஸ்லி தெரிவித்தார்.

 52 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *