English Tamil Malay

மலாக்கா நவ 26
காடேக் சட்டமன்ற உறுப்பினர் விபி சண்முகம் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
மலாக்கா ஆட்சி குழுவில் இளைஞர், விளையாட்டு மற்றும் அரசு சாரா அமைப்புகள் பிரிவிற்கு தலைமை ஏற்றுள்ள சண்முகம் கடந்த நவ 20, ஆம் தேதி நடைபெற்ற மலாக்கா சட்டமன்ற தேர்தலில் காடேக் தொகுதியில் 6 முனை போட்டியில் வெற்றி பெற்றார்.

மலாக்கா முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி இன்று இந்த நியமனங்களை அறிவித்தார்.
அப்துல் ராவ்ப் யூசோப் (தஞ்சோங் பிடாரா),ஜைடி அத்தாம் (செர்காம்), அப்துல் ரசாக் (தெலுக் மாஸ்),கல்சோம் நோர் (பெங்காலான் பத்து), டாக்டர் அக்மால் சாலே (மெர்லிமாவ்),ஙா ஹி சென் (மாசாப் ஜாயா), முகமட் ஜைலானி (ரெம்பியா), ரஹ்மான் மாரிமா(ஆயர் மோலிக்) ஆகியோர் ஆட்சிக்குழுவிற்கு நியமனம் பெற்றனர்.

கடந்த நவ 20 ஆம் தேதி நடைபெற்ற மலாக்கா சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 21 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

 38 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *