English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் நவ 23
அண்மையில் நடந்து முடிந்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பானின் பின்னடைவு அந்த கூட்டணிக்கு ஒரு அளவுகோல் அல்ல என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.

இந்த தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் தோல்வி அடைந்துள்ள போதிலும், அந்த கூட்டணியின் எதிர்காலம் முடிந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை என்றார் அவர்.
கடந்த காலங்கள் பல அரசியல் போர்களை சந்தித்து பாக்காத்தான் வெற்றி கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

அது வெளியில் அண்மையில் நடந்து முடிந்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில் அம்னோ-தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிக்கு திரும்பியதால், அந்த இனவாத கூட்டணியின் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கின்றது என்று கூறிவிட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக பாக்காத்தான் ஹராப்பான் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது என்றார் அவர்.

கடந்த 14-ஆம் பொதுத்தேர்தலில் மத்திய அரசாங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்த பாக்காத்தான் ஹராப்பான் அப்போதைய பிரதமராக இருந்த மகாதீரை நம்பி ஏமாந்ததாக ராமசாமி சுட்டிக்காட்டினார்.

அன்றைய நிலையில் பாக்காத்தான் கூட்டணி மகாதீருக்கு நெருக்குதல் அளித்து, அன்வார் பிரதமர் பதவியை ஏற்றிருந்தால் இன்றைய நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

மகாதீரின் சூழ்ச்சியின் காரணமாக தான் பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சி பறி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

 244 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *