English Tamil Malay

பிடோர் நவ 23.இந்திய மாணவர்கள் சிறந்த கல்வியாளர்களாக உருவாக வேண்டும் எனும் நோக்கத்தில் பேராக்,சிலாங்கூர்,மலாக்கா கிள்ளான் ஆகிய வட்டாரத்தில் உள்ள வசதிக்குறைந்த மாணவர்களுக்கு மடிக்கணினி,டேப் Tab மற்றும் வரைகளை உதவிடும் கணினிகள் ஆக மொத்தம் 10 கணினிகள் வழங்கி ஆதரவு கரம் கொடுத்து வருகிறார் தொழிலதிபர் பா.சுபாஸ்கரன்.

இந்திய சமுதாயம் எதிர்காலத்தில் சிறந்த நிலையை அடையக் கல்வி ஒன்றைச் சிறந்த அடித்தளம் என்பதால் குறைந்த வருமானம் பெரும் பி40 குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு இக்கவியில் முறையில் பள்ளி பாடங்களைப் படிக்க உதவும் கணினி மற்றும் டேப்கள் அவசியமான ஒன்று என்பதைக் கருதி வெ 30,000 வெள்ளி மதிப்புடைய கணினிகளை மாணவர்களுக்கு வழங்கி ஆதரவு வழங்கியதாக அலை ஒளியிடம் டத்தோ பா.சுபாஸ்கரன் விவரித்தார்.

எதிர்கால இளைஞர்கள் சிறந்து விளங்க வேண்டுமானால் கல்வி இன்றியமையாதது என்பதால் தனது குடும்பத்தில் உள்ள வறுமையை போக்கவும் நமக்காக உழைத்த பெற்றோர்களையும்,சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக பொருளாதார சுமையிலிருந்து பாதுகாக்கக் கல்வி இருந்தால் மட்டுமே உதவிட முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நாட்டில் சிறந்த கல்வி இல்லாத இளைஞர்கள் தொழில் கல்வியை கற்பதன் மூலம் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து நமது இந்திய இளைஞர்கள் தொழில் கல்வியை கற்று தங்களின் எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இளைஞர்களிடையே சிந்தனை மாற்றும் தேவை என்றும் வரும் காலம் பல தொழிநுட்டபத்தை கொண்டு தொழில் வளங்கள் பெருகிட வாய்ப்பு உள்ளதால் இந்திய இளைஞர்கள் மத்தியில் சிந்தனை மாற்றும் அவசியமா ஒன்றும் என டத்தோ பா.சுபாஸ்காரன் மேலும் குறிப்பிட்டார்

 102 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *