English Tamil Malay

மலாக்கா நவ 22
இந்திய சமூகத்தினர் மஇகாவிற்கு மீண்டும் திரும்புகின்றனர் என மஇகா மகளிர் அணி தேசிய தலைவி டத்தோ மோகனா முனியாண்டி கூறினார்.

கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடந்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில் காடேக் தொகுதியை மஇகா மீண்டும் கைப்பற்றியது இந்திய சமூகத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா சட்டமன்ற தேர்தலில் 2/3 பெரும்பான்மையில் தேசிய முன்னணியின் வெற்றியானது, மக்கள் தேசிய முன்னணியை நேசிக்கின்றனர் என்பது தெளிவாக தெரிவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜசெகவிடமிருந்து காடேக் தொகுதியை மஇகா கைப்பற்றியது ஒரு சாதனை என்று தான் கூற வேண்டும் என்றார் அவர்.

அன்மையில் மஇகா தேசிய மகளிர் அணி தலைவி பதவியை கைப்பற்றியதும், மலாக்கா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தாம் உடனடியாக களமிறங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா வெற்றியை தொடர்ந்து, வரும் 15வது பொதுத்தேர்தலுக்கு மஇகா மகளிர் அணி தயார் நிலையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

 48 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *