English Tamil Malay

பட்டர்வொர்த், நவ 23 –
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று தந்தை பெரியார் கூறிய வார்த்தை உலகம் உள்ளவரை பொருந்தும் என்று மதிக பினாங்கு மாநில 36 ஆம் ஆண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பினாங்கு மாநில மஇகா தொடர்புக்குழு தலைவர் டத்தோ மு.ஞானசேகரன் கூறினார்.

அதே வேளையில் இந்த நாட்டில்
சுயமரியாதை இயக்கம் என்பது மிக மிக அவசியமானது என்றும், 75 ஆண்டுகள் வரலாற்றைக்கொண்ட மதிக இந்த நாட்டில் மஇகா உதயமாவதற்கு முன்பே சுயமரியாதை இயக்கம் உருவாகி வரலாற்று படைத்துள்ளது எனவும் அதன் மூலமாக பல செயலாக்கப் பணிகள் நடைமுறைப்படுப்பட்டுளறது என்று மஇகா மத்திய செயலவை உறுபினருமான டத்தோ மு.ஞானசேகரன் கூறினார்.

பினாங்கு மதிகவின் 36 ஆண்டு மாநாடு, மதிக தேசியத் தலைவரும், பினாங்கு மாநிலத் தலைவருமான ச.த.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 80 க்கும் மேற்பட்ட பேராளர்களுடன் பார்வையாளர்கள் பலரும் கலந்துக்கொண்டதுடன் இம்மாநாட்டில் உடன் மதிகவின் துணைத் தலைவர் ச.ரா.பாரதி, பொதுச் செயலாளர் பொன்வாசகம், பொருளாளர் கிருஷ்ணன் தேசியத்தை பிரதிநித்து கலந்துக்கொண்டார்கள்.

மதிக பினாங்கு மாநில மாநாட்டில் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் , சீனப்பள்ளிகள் தொடர்பாக அரசாங்கம் கொண்டுள்ள நிலைபாட்டிற்கு நன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஒரு தீர்மானத்தில் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் அரசு பொதுவிடுமுறை வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் மதிக பினாங்கு மாநிலத் தலைவர் ச.த.அண்ணாமலை தலைமையில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி நிதியும் மாநாட்டில் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

 94 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *