English Tamil Malay

மலாக்கா நவ 21
நேற்று நடந்த மலாக்கா சட்டமன்ற தேர்தலில் மாநில ஜசெகவின் பொறுப்பேற்று மலாக்கா ஜசெக தலைவர் தே கோக் கிவ் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மாநில சட்டமன்ற தேர்தலில் ஜசெகவின் தோல்விக்கு தாம் முழு பொறுப்பேற்பதாக பெம்பான் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த அவர் குறிப்பிட்டார்.

இந்த தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட ஜசெக நான்கு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
மாநில ஜசெகவின் தோல்விக்கு மலாக்கா மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்தார்.

மாநில ஜசெக தலைவர் என்ற வகையில் தேர்தலில் முடிவுகளுக்கு தாம் தான் பொறுப்பு என்றார் அவர்.

 60 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *