English Tamil Malay

பட்டர்வொர்த் நவ 22-ஆர்.ரமணி
செபராங் பிறை வட மாநிலத்தில்,தாமான் சந்தேக்கில் வீற்றுள்ள ஸ்ரீ இராகவேந்திரர் தியான மன்றத்தின் ஸ்தாபரகர் பெரியவர் சந்திரசேகரன் சிறப்பிக்கப்பட்டார்.

இவ்வட்டாரத்தில் ஸ்ரீ இராகவேந்திரர் தியான மையம் அமையக் காரணமாக இருந்த திரு சந்திரசேகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுடன் தியான மன்ற பொறுப்பாளர்கள் முன்னிலையில் அவருக்குச் சிறப்புச் செய்யப்பட்டது என ஸ்ரீ இராகவேந்திரர் தியான மையத்தின் செயலாளர் கணேஷ் சதாசிவம் கூறினார்.

ஸ்ரீ இராகவேந்திரர் தியான மன்றத்தினால் இவ்வட்டாரத்தில் இந்துப் பெருமக்களுக்கு சமூக,கல்வி,பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன் ஸ்ரீ இராகவேந்திரர் குருவின் போதனைகளும் போதிக்கப்பட்டு வருவதாக ஆலய தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.

சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் உடன்  ஸ்ரீ இராகவேந்திரர் தியான மையத்தின் தலைவர் விஜயகுமார்,துணைத் தலைவர் பாலன் நம்பியார், செயலாளர் கணேஷ் சதாசிவம்,பினாந்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய தலைவர் சு.மணிவாசகம் மற்றும் சுற்று வட்டார பக்த பெருமக்கள் உடன் கலந்து சிறப்பித்தனர்.

 72 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *