English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம் நவ 21-மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் மலேசிய பெர்ஹாட் 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.அதன் தேசிய தலைவராக இருக்கும் மாசிலாமணி கூட்டுறவு கழகம் தொடங்கிய காலம் தொட்டு இம்மியளவும் இந்திய கூட்டுறவு கழக பங்குதாரர்களின் வளர்ச்சியில் முன்னேற்றத்தைக் கொண்டு வரவில்லை, ஆகவே பினாங்கு மாநில மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தில் நிர்வாக தலைவராக இருக்கும் வி.சுந்தரராஜு மற்றும் நிர்வாக் குழுவினர் அனைவரும் அக்கூட்டுறவு கழகத்திலிருந்து இராஜனமா செய்வதாகச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அதன் பினாங்கு மாநில தலைவர் வி.சுந்தரராஜூ குறிப்பிடுகையில்,9 நிர்வாகத்தினர் கொண்ட பினாங்கு மாநில மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத் தலைவராகக் கடந்த 15.6.2019 தேர்வு பெற்றதாகவும் அதனைத் தேசிய தலைமை கழகமான மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தின் தலைவர் மாசிலாமணி மற்றும் கெளரவ செயலாளர் கையொப்பமிட்ட கடிதம் பினாங்கு மாநில மாஜூ ஜெயா கூட்டுறவு கழக நிர்வாகம் 1.1.2023 வரை செயல்பட அனமதி தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

கடந்த 23.10.2021 ஆம் நாள் பெர்மாத்தாங் பாவ் பிக் போய் உணவகத்தில் மாநில செலவைக் கூட்டம் நடைபெற்றது என்பதுடன் அதில் 11 நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக சுந்தர்ராஜூ கூறினார்.

இதனிடையே பினாங்கு மாநில மாஜூ ஜெயா முறையாக அங்கத்தினர்களைச் சேர்க்கவில்லை எனக்கூறி மாநில ஒருங்கிணைப்புக் குழுவை முடக்குவதாகக் கூறி 23.10.2021 அன்று நடந்த மாநில செலவைக் கூட்டம் செல்லுபடியாகாது எனக் கூறி தலைமை கழகத்திலிருந்து 27.10.2021 ஆம் நாள் கடிதம் ஒன்றைச் செயலாளர் அனுப்பாமல் அதன் மேலாளர் மகேந்திரன் அனுப்பியுள்ளதாக சுந்தர்ராஜூ விளக்கமளித்தார்.

27.10.2021 கிடைக்பெற்ற கடித்ததுக்குத் தேசிய கூட்டுறவு கழகத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்ட நிர்வாக உறுப்பினர்கள் தங்களின் மாநில நிர்வாகப் பதவியை இராஜமா செய்வதாகவும்,இது வரை உருப்படியான நடவடிக்கைகளைச் செய்யத் தவறிய மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தின் தேசிய தலைவர் மசிலமாணியின் தலமைதுவத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதனுடன் பினாங்கு மாநிலத்திலிருந்து உறுப்பினர்கள் மூலமாகப் போட்ட பங்கு பணத்திற்கு உரிய இலாப ஈவைக் கொடுக்க வேண்டும் எனத் தலைமை கூட்டுறவு கழகத்துக்கு வேண்டுகோள் விடுப்பதாக பெமாத்தாங் திங்கியில் உள்ள ஒசியன் உணவகத்தில் கடந்த 16.11.2021 அன்று நடந்த மாநில செயலைக் கூட்டத்தில் ஏகமானதாக முடிவுக்காகப்பட்டுள்ளது என மாநில தலைவர் வி.சுந்தரராஜூ தெரிவித்தனர்.

பினாங்கு மாநில மாஜூ ஜெயா கூட்டுறவு கழகத்தில் 132 ஆயுள் உறுப்பினர்கள் மற்றும் 1300 உறுப்பினர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

 56 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *