English Tamil Malay

அகல்யா
பெர்மாத்தாங் திங்கி, நவ 20 –
மத்திய செபராங் பிறையில் அமைந்துள்ள பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி இன்று இவ்வளவு சிறப்பாக தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முதன்மை பங்களிப்பு டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி வே.தமிழ்ச்செல்வி புகழாரம் சூட்டினார்.

டத்தோ ஸ்ரீ் க.புலவேந்திரன்

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் வாரியக்குழுத் தலைவரும், பினாங்கு மாநில குற்றத்தடுப்பு அறவாரியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் அண்மையில் டத்தோஸ்ரீ விருது பெற்றமைக்கு ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு இணைந்து பாராட்டு விழா நடத்தினர்.

தற்போது திருமதி வே.தமிழ்ச்செல்வி தலைமை ஆசிரியராக கொண்டு செயல்படும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியில் இரண்டு கட்டங்கள் எழவும், பாலர் பள்ளியின் மேம்பாட்டிற்கும் ,பள்ளிக்கு ஏற்பட்ட அனைத்து தொல்லைகளை தீர்த்து வைக்கவும் அரும்பாடு பட்ட டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் நம் இந்திய சமூகத்திற்கு கிடைத்த ஒரு சிறந்தத் தலைவர் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.முனியாண்டி கூறினார்.

தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வரும் டத்தோஸ்ரீ புலவேந்திரனுக்கு பினாங்கு மாநில ஆளுநர் வழங்கிய டத்தோஸ்ரீ விருது என்பது காலத்திற்கு ஏற்ற சிறப்பாக அமைந்துள்ளது என்று பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியத் அண். வீராசாமி விவரித்தார்.

 70 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *