English Tamil Malay

புக்கிட் மெர்தாஜம்நவ 14 பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் நலமுடன் சமூகப் பணி செயந வேண்டும் எனும் நோக்கத்தில்  புக்கிட் மெர்தாஜாம் இரயில்வே  முனீஸ்வரர் சிவன் ஆலயத்தில் சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இந்த பூஜை முனீஸ்வரர் சிவன் ஆலய தலைவர் டத்தோ.து.தேவேந்திரன் அவர்கள் தலைமையேற்றார்.


இந்து சமுக காவலராக்க இருக்கும் இந்து அறப்பணி வாரியத்தின் உயர்வுக்கு அதன் தலைவர் பேராசிரியர் பி.இராமசாமிக்குத் துணையாக இருந்து திறம்படச் சேவையாற்றிவரும் டத்தோ மு.இராமசந்திரன் பூரண குணமடைந்திருப்பதை முனீஸ்வரர் சுவாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆலயத்தில் சிறப்புப் பூஜை ஏற்பாடு செய்வதாக டத்தோ து.தேவேந்திரன் கூறினார்.


ஆலய திருப்பணி வேலைகள் நடைபெறுவதைப் பார்வையிட்ட டத்தோ மு.இராமசந்திரன்,ஆலய சிறப்புப் பூஜைக்கு நன்றி கூறியதுடன்  80 ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னாள் இரயில்வே ஊழியர்களால் அமைக்கப்பட்ட ஆலயத்துக்குத்  திருப்பணி குழுவினர் கேட்டுள்ள  உதவிகளை இந்து அறப்பணி வாரியம் உதவிகளைச் செய்யும் என அவர் வாக்குறுதி அளித்தார்.


இந்த சிறப்புப் பூஜையில் உடன் புக்கிட் மெர்தாஜம் முனீஸ்வரர் சிவன் ஆலய செயலாளர் ந.கணேசமூர்த்தி,இந்து அறப்பணி வாரிய ஆணையர் என்.எஸ்.தனபாலன்,பிறை ஜாலான் பாருமுனீஸ்வரர் ஆலய பொருளாலர் வீரையா,டாக்டர் குணசேகரன் பிள்ளை,குருக்கள் கணேசன் பிள்ளை ஆலய  நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சபதி பிரபு மற்றும் ஆலய தொண்டூழியங்கள் உடன் கலந்து சிறப்பித்தனர்.

 100 total views,  4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *