English Tamil Malay

அகல்யா
ஜார்ஜ்டவும், அக் 30 –
வாங்காள தேசத்தில் வாழ்ந்து வரும் இந்துகளைதும், இந்தியர்களையும் வன் கொடுமைக்கு ஆளாக்காதீர் என்று பினாங்கு தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்க பேரவையின் தலைவர் ச.வேலாயுதம் தலைமையில் பினாங்கு வாங்காள தேச தூதரக அலுவலகத்திம் முன் 13 அரசு சாரா இயக்கங்கள் ஒருபித்தக் குரலில் கண்டன அமைதி மறியலுகுக்குப்பின் மகஜர் வழங்கினர்

1971 பாக்கீஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றுக்கொடுத்த இந்தியாவிடம் கொஞ்சமும் நன்றி விடுவாசம் இன்றி , இந்துப் பெண்களை கற்பழிப்பதும், இந்தியர்களை கடுமையாகத் தாக்கி கொடுமை புரிவதும், கொலை செய்வதும் ஒரு துரோக செயல் என்று ச.வேலாயுதம் தலைமையிலான அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பினாங்கு , லிட்டல் இந்தியா, பிஷோப் வீதியில் அமைந்துள்ள வங்காள தேச தூதரக அலுவலகத்தின் வாசலில் நடந்த அமைதி மறியலுக்குப்பின், ச.வேலாயுதம், பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன், திரு.கருணா, ப.த.மகாலிங்கம். ஆ. தருமன் , அம்பிகாபதி, பால நம்பியார், பினாங்கு இந்து தர்ம மாமன்றத் தலைவர் ந.தனபாலன் மேலும் பல தலைவர்கள் வங்களா தேசத்தின் தூதரக அதிகாரி டத்தோ ஷேக் இஸமாயில் பின் டத்தோ ஷேக் அலாவுதீனிடம் தங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட கண்டன மகஜரை வழங்கினர்.

வங்காள தேச தூதரக அதிகாரி டத்தோ ஷேக் இஸ்மாயில், மனிதாபிமான அடிப்படையில், தவறுகள் நடப்பதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். நான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுக்காண உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். டத்தோ ஷேக் இஸ்மாயிலின் உதவிளார் திரு.சாகுல் அமீட் பின் முகமாட் இஷாக் கூறுகையில் மனிதாபிமானமற்ற செயல் எங்கு நடந்தாலும் நிச்சயம் கண்டனத்திற்குறியது என்று கூறினார்.
பினாங்கு தீவு மற்றும் பெருந்திலத்தில் இருந்து 13.அமைப்புகள் இந்த இந்த அமைதி மறியலில் கலந்துக்கொண்ட வேளையில், பினாங்கில் கோவிட்-19 தொற்று இன்னும் மூன்றாம் கட்ட நிலையில் இருப்பதால் அதிக அளவிலான இயக்கங்கள் கலந்துக்கொள்ள காவல் துறையின் அனுமதி இல்லை என்பதால் குறிப்பிட்டவர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். கண்ட மறியல், மகஜர் வழங்கும் குழுவிற்கு தலைமை ஏற்ற ச.வேலாயுதம் உடனடியாக இந்திப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தினார். தேசத்தில் நடக்கும் இந்துகளுக்கான வன்கொடுமையை கண்டித்து பினாங்கில் பெருவாரியான இயக்கங்கள் தங்ளின் எதிர்ப்பை தெரிவித்ததாகவும், கடந்த வாரம் தலைநகரில் உள்ள வங்காள தேச தூதரகத்தில் கண்டன மகஜர் வழங்கப்பட்டதையும் வேலாயுதம் நினைவுக் கூர்ந்தார்.

 257 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *