English Tamil Malay

கல்யா
பத்து காவான், அக் 23 –
மக்களுக்கான பணியை மகத்துவமாக செய்து முடிக்கவும், கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் திட்டங்களுக்கு தோல் கொடுக்கவும் பத்து காவான் தொகுதியில் மாற்றம் தேவை என்று தலைவர் வேட்பாளர் சுரேஷ் செல்லையா மற்றும் மு.ஞானசேகரன் சூளுரைத்தனர்.

பத்து கவான் மஇகா தொகுதியில் மக்களுக்கான மகத்தான திட்டங்களை தாம் கைவசம் வைத்துள்ளதாக சுரேஷ் செல்லையா கூறினார். அதன் அடிப்படையில் பத்து காவான் மஇகா தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் மாற்றத்தை நோக்கி நாங்கள் பயணிப்பதாகத் தலைவர் வேட்பாளர் சுரேஷ் செல்லையா கூறினார்.

பத்து கவான் மஇகா தொகுதிக்கு சுரேஷ் செல்லையா தலைமையில் துணைத் தலைவருக்கு மஇகாவின் நீண்டநாள் உறுப்பினரும், பிறை தோட்ட அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயச் செலயளருமான ஞானசேகரன் த/பெ முனியாண்டி, தேசிய பேராளர் மாநாட்டிற்கு பேராளர்களாக வருவதற்கு சுப்பிரமணியம் த/பெ இராமன் மற்றும் தர்ம லிங்கம் களம் காண்கிறார்கள்.
பிறை வட்டாரத்தில் தனது தொண்டூழிய சேவையால் பிரபலமாக அறிமுகமாகியுள்ள சுரேஷ் செல்லையா, உடல் பேறு குறைந்தவர்களுக்கு உதவி வருவதுடன், கால் இல்லாதவர்களுக்கு கால் பொறுதி கொடுப்பதிலும், கடந்த கோவிட்-19 கடும் காலகட்டத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசதியற்ற குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வந்துள்ளதாக கூறினார்.
 

திரு.சுரேஷ் பிறை, பத்து கவான் தொகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பதால், தன்னுடைய சேவையை மேலும் விரிவுபடுத்தவும், மஇகா உறுப்பினர்களுக்கு உதவிடவும் தாம் பத்து காவான் மஇகா தொகுதிக்குப் போட்டியிடுவதாக கூறினார். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிறை தோட்ட அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்திற்கு ஆலய நிர்வாகத்துடனும், துணைத் தலைவர் வேட்பாளர் மு.ஞானசேகரனுடனும் ஒத்துழைத்து சுமார் 4 இலட்சம் வெள்ளி திருப்பணி வேளைக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என்று சுரேஷ் கூறினார்.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனின் உதவியுடன் ஆலயப் திருப்பணிக்கு செயலாற்ற தாம் தாயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூரினார். இன்றைய தேர்தலின் தாம் தேர்வு பெற்றால் ஆலயத் திருப்பணி வேலையில் பாடாற்றுவேன் என்று சுரேஷ் செல்லையா கூறினார். மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனின் புதிய மாற்றத்துடன் மஇகா மீண்டும் கோலோட்ச வேண்டும் என்ற சிந்தனைக்குத் தான் முழு மூச்சாக தோழமை அளிக்கத் தயார்ப் படுத்திக்கொள்ள இந்த போட்டியும், வெற்றியும் தேவைப்படுவதாகச் செய்தியாளர் சந்திப்பில் தலைவர் சுரேஷ், ஞானசேகரன் , சுப்பரமணியம் மற்றும் அவர்தாம் குழுவினர் கூறினர்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *