English Tamil Malay

மலாக்கா அக் 23
எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் பெர்சாத்து கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெளிவு படுத்தினார்.

கடந்த அம்னோ உச்ச மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு இறுதியானது என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் அம்னோ தனது ஒத்துழைப்பை தாமதப்படுத்தி வருவதாக என்ற கேள்விக்கு இடமில்லை என முன்னாள் துணைப் பிரதமருமான அவர் சொன்னார்.

பெர்சாத்து கட்சியுடன் எவ்விதத்திலும் அம்னோ ஒத்துழைக்க போவதில்லை என பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி தனித்து போட்டியிடும். இந்த தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று இரவு இங்கு ஹங்துவா ஜெயா அம்னோ டிவிஷன் பொறுப்பாளர்களுடன் நடந்த ஒரு சந்திப்பில் அவர் பேசினார்.
இந்த சந்திப்பில் அம்னோ பொதுச் செயலாளர் அமாட் மஸ்லான், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 18 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *