English Tamil Malay

கோலாலம்பூர் அக் 22
கெராக்கான் கட்சியின் தேசிய பேராளர்கள் மாநாடு வரும் நவ 13 ஆம் தேதி மலாக்காவில் நடைபெறுமென அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கூறினார்.

நவ 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மலாக்கா சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் மாநாடு அங்கு நடைபெற இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் பேராளர் மாநாடு ஏற்கனவே பினாங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் வெற்றிக்கு உதவும் வகையில் கெராக்கான் முழுமூச்சாக இந்த பிரச்சாரத்தில் இறங்கும் என அவர் குறிப்பிட்டார்.

இன்று கிளாந்தான் கெராக்கானின் பேராளர்கள் மாநாட்டை தொடக்கி வைப்பதற்கு முன்பாக அவர் பேசினார்.
மலாக்கா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவ 8 மற்றும் வாக்களிப்பு நவ 20 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

 18 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *