English Tamil Malay

பினாங்கு அக்டோபர் 22- பினாங்கு மாநிலத்திலும் பெரு நிலத்திலும், தொண்டூழிய அடிப்படையில் செயல்பட்டு வரும் ஷான் ஆதரவற்ற சிறார் காப்பகங்களுக்கு, பெருந்தகையினரும் தாராள மனமுடையோரும்
நிதி வழங்கி, அவற்றின் செயல்பாடுகளுக்கு
ஊக்கமளிக்க முன்
வருமாறு, அவற்றின் ஸ்தாபகரும் பராமரிப்புத் தலைவருமான
மருத்துவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் பணிவுடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன்

பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவின்மையால், பரிதவிப்புக்கு
உள்ளாகியிருக்கும் குழந்தைகளுக்கும்,
பராமரிப்பாளர் தயவின்றி
தெருவோரங்களில் தஞ்சமடைந்து, வயிறு வளர்த்து வந்த
சிறார்களுக்கும் அபயமளித்து, அவர்களது நலனில் அக்கறை
உணர்வோடு பேணுவதில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக
இவ்விரு காப்பகங்களும் தனது சீரிய தலைமைத்துவத்திலும்,
கண்காணிப்பிலும் சிறப்புடன் செயல்பட்டு வருவதாக அவர்
குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுநல நேசர்களின் தயவினாலும், நல்லுள்ளம் கொண்டோரின்
ஆதரவினாலும் இவ்விரு காப்பகங்களும், அவற்றில் தஞ்சமடைந்திருக்கும்
சுமார் 35 சிறார்களின் அனைத்து தேவைகளுக்கும் குறைவற்றச் சூழலுடனே பராமரிக்கப்படுகின்ற நிலையில், கடந்த ஓராண்டுக்கும்
மேலாக, மருட்டலை ஏற்படுத்தியிருக்கும்
கொரோனா நோய்த்
தொற்றின் தாக்கத்தால், பொதுநிதி கிட்டுவதில் பெரும் தொய்வு
நிலவியிருப்பதை அவர் வருத்தத்துடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆயினும், காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்ற சிறார்கள்
அனைவருக்குமுரிய வழக்கமான தேவைகளில், தடங்கல் நிகழாதிருக்கும்
வண்ணம், கவனிக்கத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இந்நிலைமை
தற்போது சமாளிக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும்
நெருக்கடியானச் சூழல் உருவெடுத்து, கெடுபிடியான நிலைமை
தலைதூக்குவதற்கு முன், நிதியாதரவு மிகவும் அவசியமென்று அவர்
வலியுறுத்தியிருக்கிறார்.

இத்தகைய ஆதரவற்ற சிறார்களுக்கு உணவு, உடைகள் ஆகியவற்றுடன் உறைவிடமும் வழங்கி,
அவர்களை உற்ற மனிதர்களாக
உருவாக்குவதில், தங்களது அக்கறை உணர்வான முயற்சிக்கு தோள் கொடுக்கும் வண்ணம், பொது மக்களின் நல்லாதரவு தேவைப்படுவதால்
இரக்க சிந்தையுடையோர், தங்களின் தாராள நன்கொடைகளை
கீழ் காணும் ஷான் பராமரிப்பு காப்பகங்களின் மே வங்கியின்
சேமிப்புக் கணக்கில் சேர்ப்பிக்குமாறும், அத்தகைய முறையில்
நன்கொடை வழங்குகின்ற அனைவருக்கும், உரிய முறையில் வரவுச்
சிட்டைகள் வழங்கப்படுமென்றும் அவர் விவரித்திருக்கிறார்.வங்கி கணக்கு என்

MAY BANK ACCOUNT NO:507068134344

 44 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *