English Tamil Malay

மலாக்கா அக் 22
இங்கு மஸ்ஜிட் தானாவில் இந்தியர்கள் இறுதிக்கிரியை செய்வதற்காக பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட 1.8 ஹெக்டர் நிலம் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்க ஆட்சி பறிபோனது ஜசெக உதவித் தலைவர் எம். குலசேகரன் கூறினார்.

இங்குள்ள இந்திய சமூகத்தினர் இறுதிக்கிரியை செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் தற்போது மறுக்கப்பட்ட தற்கான சரியான விளக்கத்தை அரசாங்கம் தரவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த நிலத்திற்கான பத்திரம் காணாமல் போய்விட்டதாக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் கூறிவருவது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் மனிதவள அமைச்சருமான அவர் சொன்னார்.

நேற்று மஸ்ஜிட் தனா விற்கு வருகை புரிந்து அந்த நிலத்தை பார்வையிட்ட பின் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பேசினார்.
இந்தியர்கள் இறுதிக்கிரியை செய்ய முன்னாள் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஒதுக்கீடு செய்த நிலம் ஏன் மறுக்கப்பட்டது என இங்குள்ள இந்திய சமூகத்தினர் கேள்வி எழுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மலாக்கா மாநில பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் மீண்டும் ஒப்படைத்தே ஆக வேண்டும் என பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் வலியுறுத்தினார்.

முன்னாள் மலாக்கா பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வழங்கிய 1.8 ஹெக்டர் நிலத்தை ஏன் பெரிக்காத்தான் அரசாங்கம் பறித்துக் கொண்டது என அவர் கேள்வி எழுப்பினார்.
வரும் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் நிச்சயம் மாநில அரசாங்கத்தை கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த சமயத்தில் மீண்டும் இந்த நிலம் இந்திய சமூகத்திற்கு
திருப்பி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பாக்காத்தான் ஹராப்பானின் ஆட்சியின்போது அப்போதைய ஆட்சி குழு உறுப்பினரும் காடேக் சட்டமன்ற உறுப்பினருமான ஜி. சாமிநாதன் இந்த நிலத்தை பெற்றுத் தந்ததாக குணா குறிப்பிட்டார்.

 52 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *