பெட்டாலிங் ஜெயா அக் 20
மலாக்கா அரசாங்கம் ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாக்காத்தான் ஹராப்பான் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என ஜசெக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
அப்படி இவர்கள் அனுமதிக்கப்பட்டால் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பங்காளிகாளி கட்சிகளுக்கிடையிலான சுமுகமான உறவு பாதிக்கப்படும் என்றார் அவர்.
முன்னாள் மறக்காம திரிப் சார் இட்ரிஸ் ஹாரோன் உட்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர் வரும் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதை ஜசெக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல் அமானா கட்சியும் இந்த பரிந்துரையை எதிர்த்து வருகிறது.
மலாக்கா அரசாங்கம் ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான 4 சட்டமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு நடத்தி உள்ளனர்.
மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டிகள் இவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
பாக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் தங்களின் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பாக்காத்தான் ஹராப்பான் இந்த நால்வரை ஏற்றுக் கொண்டால் வரும் காலத்தில் இவர்கள் மீண்டும் கட்சி தாவ மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
309 total views, 1 views today