English Tamil Malay

கோலாலம்பூர் அக் 20
தேசிய முன்னணியிடமிருந்து தெளிவான பதில் கிடைக்காவிட்டால் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு பெரிக்காத்தான் நேஷனல் தயார் என அந்தக் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.

இந்த விவகாரத்தில் தெளிவான அறிகுறி கிடைக்கப் பெறாவிட்டால் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
மும்முனை போட்டியை சந்திக்க பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இதர பங்காளி கட்சிகளான பாஸ்,கெராக்கான் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதமருமான அவர் சொன்னார்.

மலாக்கா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவ 8 ஆம் தேதி நடைபெற உள்ளதால் இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பெர்சாத்து தலைவருமான அவர் சொன்னார்.

முதலமைச்சருக்கான ஆதரவை 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதால் மலாக்கா அரசாங்கம் கவிழ்ந்தது.

 34 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *