English Tamil Malay

பெக்கோக் அக் 20
எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு 100 குடும்பங்களுக்கு பலகாரம் செய்ய மாவு வகைகளை பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் வழங்கினார்.

ச்சாவில் 50 குடும்பங்களுக்கும் மற்றும் பெக்கோக்கில் 50 குடும்பங்களுக்கும் பலகார வகைகள் வழங்கப்பட்டதாக டாக்டர் கூறினார்.
அண்மையில் கோவிட் 19 தாக்க காலத்தில் இந்த குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கியதாக முன்னாள் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

நமது இந்திய சமூகத்தினர் நாட்டின் பொருளாதார நிலைக்கேற்ப தீபாவளி மிதமாகவும் சிக்கனமாகவும் கொண்டாட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 54 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *