English Tamil Malay

கோலாலம்பூர் அக் 20
எதிர் வரும் மலாக்கா சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஒத்துழைப்பு அவசியம் என பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடினின் பரிந்துரையை அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் ஷார்காசி நிராகரித்தார்.

ஹம்சாவின் இந்த பரிந்துரை அறிவுக்கு எட்டாத ஒன்று என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.
மத்திய அளவில் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே ஒத்துழைப்பு இருந்து வந்த போதிலும் மாநில அளவில் இது பொருந்தாது என்றார் அவர்.

குறிப்பாக சபா சட்டமன்ற தேர்தலில் இவ்விரு கூட்டணி கிடையே ஒத்துழைப்பு தோல்வியில் முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சில சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தி கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அந்த தவறை செய்யாது என அவர் தெளிவுபடுத்தினார்.

 16 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *