English Tamil Malay

சிரம்பான் ஜெயா அக் 17
சிரம்பான் ஜெயா இளைஞர் சமூக கிளாபின் வளர்ச்சிக்கு பாக்காத்தான் ஹராப்பான் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் நன்கொடை வழங்கினார்.

இந்த நன்கொடை க்கான காசோலையை கிளாபின் பிரதிநிதி ஷாபிக் ஜாமாலுடினிடம் குணா வழங்கினார்.
இங்குள்ள சேப்பாக் தக்ராவ் அரங்கத்தை பழுது பார்க்க இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என குணா வலியுறுத்தினார்.

தற்போது அதிகமான இளைஞர்கள் சேப்பாக் தக்ராவ் விளையாட்டில் மிக ஆர்வம் கொண்டுள்ளதால் இந்த அரங்கம் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் பழுது பார்க்கும் பணி முடிவடைந்ததும் இந்த அரங்கத்தில் நட்பு முறை ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
காரணம் இதுபோன்ற நட்பு முறை ஆட்டங்களால் பல்லின சமூகங்களுக்கிடையே நட்பு மற்றும் புரிந்துணர்வு வலுப்படும் என்றார் அவர்.

இந்த நிகழ்வு சிரம்பான் மாநகர் மன்றம் உறுப்பினர் புவான் ஜமீலா மற்றும் கிளாபின் தலைவர் ராஹிம் ஹாசிம், துணைத் தலைவர் முகமட் ஹாமிரான் மற்றும் செயலாளர் ஹாபிஸ் முகமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 64 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *