English Tamil Malay

பினாந்தி அக 19-புக்கிட் மெர்தாஜம், பினாந்தி தோட்டத்தில் உள்ள ஸ்ரீ வீர ஜடா முனி ஆலயத்தில் வருடாந்தி பூஜை சிறப்புடன் நடைப்பெற்றது.

ஆலய ஒருங்கினைப்பாளர் பாலன் நம்பியார்,ஆலய தொண்டர் குழுவினர்,ஆலய மகளீர் இளைஞர் ஆதரவில் ஆலய சிறப்பு பூஜை கொண்டாடப்பட்டது.

இவ்வட்டாடத்தில் பழமையான ஆலயமாக திகழும் ஸ்ரீ வீர ஜடா முனி ஆலயம் பினாங்கு கலை கலாச்சாரம் மற்றும் நற்பணி மன்ற ஆதரவில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

பினாங்கு இந்து அறப்பணி வரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் புரண நலம் பெற வேண்டியும் ஆலய சார்பில் பிராத்தனை செய்யப்பட்டது என ஆலய ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தின் மூலமாக வட்டார மக்களுக்கு தேவையான உதவிகளை கோவிட் 19 தொடங்கிய காலத்திலிருந்து நோன்பு பெருநாள்,தீபாவளி போன்ற பண்டிகை காலத்தில் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை ஸ்ரீ வீர ஜடா முனி ஆலயம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.

இந்த சிறப்பு பூஜையில் சிறப்பு பிரமுகர்களாக பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன்,டத்தோ செளந்தராஜன்,ஆலய ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார்,பினாந்தி முத்து மாரியம்மன் ஆலய தலைவர் சு.மணிவாசகம்,டாக்டர் குண்சேகரன் பிள்ளை ஆலய காப்பாளர் டத்தோ சுப்பிரமணியம் மற்றும் வட்டார பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

 60 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *