English Tamil Malay

பட்டர்வொர்த் அக 19-அண்மையில் நவராத்திரி விஜய தசமி இறுதி நாள் கொண்டாட்ட தினத்தில் பினாங்கு இந்து அறப்பணி வாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ மு.இராமசந்திரன் 2022 ஆம் ஆண்டுக்கான சுபகிருது வருட திருக்கோயில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கத்தை பட்டர்வொர்த் அருள் மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை சிவகலாநிதி சிவஸ்ரீ க.வடங்கராஜா சிவாச்சாரியார் அவர்கள் ஆசிரியராக இருந்து தயார் செய்துள்ளார்.இந்த சுபகிருது வருட வாக்கி பாஞ்சாங்கம் மலேசிய நேரப்படி என்ற வகையில் தயாரித்திருப்பதாக க.வடங்கராஜா சிவாச்சாரியர் மேலும் தகவல் அளித்தார்.

வாக்கிய பஞ்சாங்கம் இது வரை வெளி நாடுகளிலிருந்து நமக்கு கிடைத்து வந்துள்ளது என்றும்,வெளியிடப்பட்ட சுபகிருது வருடத்துக்கான வாக்கியப் பஞ்சாங்கம் நமது நாட்டு சூழ் நிலைக்கு எற்ப நாட்டின் நேரப்படி கணிக்கபட்டுள்ளது தனி சிறப்பு வாய்ந்தது என டத்தோ மு.இராமசந்திரன் குறிப்பிட்டார்.

மக்கள் மிகவும் எளிதில் புரியக்கூடிய வையில் விளக்கங்கங்களுடன்  வெளியீடு கண்டுள்ள  வாக்கியப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது  என்றும் சிறந்த  விளக்கங்களுடன் தயாரிக்கபட்டுள்ள இந்த பஞ்சாங்கம்  அனைவருக்கும் பயனுல்லதாக அமையும்  என்றும் டத்தோ மு.இராமசந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த வாக்கிய பஞ்சாங்கம் நாடு முழுவதில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும் என்பதுடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் சார்பில் வெளியீடபட்ட வாக்கிய பஞ்சாங்கம் இது இரண்டாவது முறையாக வெளியீடப்படட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

க.வடங்கராஜா சிவாச்சாரியார்

இந்நிகழ்ச்சியில் உடன் சிறப்பு பிரமுகர்களாக டத்தோ ஹாரிகிருஷ்ணன்,டத்தோ கலைச்செல்வன்,பட்டர்வொர்த் அருள் மிகு மகா மாரியம்மன் ஆலய தலைவர் சஞ்ஜிலாதிபன் மற்றும் பொது மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

 248 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *