English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் அக் 18
இந்நாட்டில் மலாய் காரர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பல்லவி பாடி வருவதாக பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.

பொருளாதாரத்தில் மலாய்க்காரர்கள் சீன சமூகத்திற்கு இணையாக இல்லாததால் மலாய் சமூகத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என மகாதீர் கூறி வருவது வேடிக்கையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு முறை பிரதமர் பதவி வகித்த மகாதீர், மலாய் சமூகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்து இயலவில்லை என்பதே நமது கேள்வி என்றார் அவர்.
புதிய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் நாட்டில் இதே பல்லவிதான் பாடப்பட்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத் துறையில் அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் மகாதீருக்கு ஒரு போதும் ஒரு போதும் இருந்ததில்லை.

தமது இரு முறை பிரதமர் பதவி ஆட்சி காலத்தில் மகாதீர் இனவாதமாக தான் பேசி வந்துள்ளார்.
மலாய் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்தை பற்றி பேசிவரும் மகாதீர், பி40 பிரிவை சேர்ந்த இதர சமூகத்தின் நலன்களை கண்டுகொள்ளவில்லை இதை அவர் சாடினார்.

அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கையில் அம்னோவை சேர்ந்த அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் மட்டும்தான் பலன்களை அடைந்துள்ளனர் என்பதை மகாதீரால் மறுக்க முடியாது என்றார் அவர்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *