English Tamil Malay

ஜொகூர் பாரு அக் 18
இந்நாட்டில் இன பிரிவினைவாத அரசியல் முறை ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என ஜோகூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

நாட்டில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 62 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து நிலையிலும் இன ரீதியிலான அரசியல் நடத்தப்பட்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கொள்கைகள் நாட்டில் தொடர்ந்து நீடித்து வருவதாக பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

குறிப்பாக கோவிட் 19 தாக்க காலத்திலும் இந்த கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற இனபேத கொள்கைகளால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்தள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டில் கல்வித் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இன ரீதியிலான கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாகுபாடு கொள்கைகளால் ஆற்றல் மற்றும் திறன் மிக்கவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த கொள்கைகளால் நமது அண்டை நாடான சிங்கப்பூர் தான் அதிகம் பயனடைந்து வருகிறது.

இந்நாட்டில் ஆற்றல் மற்றும் திறன் மிக்கவர்களுக்கு வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதால், இவர்கள் சிங்கப்பூருக்கு படை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதை தடுத்து நிறுத்த ஒரு புதிய அரசாங்கம் அமைவதுதான் ஒரு சரியான தீர்வாக அமையுமென ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 34 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *