English Tamil Malay

ஜோர்ஜ் டவுன் அக் 18
பிஎஸ்ஆர் கடல் மீட்பு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதா என்பதை பினாங்கு முதலமைச்சரின் அரசியல் செயலாளர் தே லாய் எங் நிரூபிக்க வேண்டும் என பினாங்கு கெராக்கான் தலைவர் ஓ தோங் கியோங் கூறினார்.

இந்த திட்டத்திற்கு மாநில மக்கள் ஆட்சேபம் தெரிவித்து வந்த போதிலும், மாநில அரசாங்கம் அதை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என அவர் வினவினார்.

இந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதில் பினாங்கு அரசாங்கம் உறுதியாக இருந்து வருகிறது. இதற்கான பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிஎஸ்ஆர் கடல் மீட்பு திட்டத்தை பினாங்கில் உள்ள மீனவர்கள் முற்றாக எதிர்த்து வருகின்றனர்.
இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநிலத்திலுள்ள மீனவர்கள் அச்சம் கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் மாநில மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை பினாங்கு அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தில் மக்களின் நலன்களுக்கு பினாங்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என அவர் சொன்னார்.

 62 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *