English Tamil Malay

கோலாலம்பூர் அக் 17
வெளிநாடுகளில் உள்ள மலேசிய தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை தலைவர் செய்துள்ள மேல் முறையீட்டை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என கெராக்கான் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.

குழந்தைகளுக்கு பாகுபாடு இழைக்கக் கூடாது என கூட்டரசு சட்டத்தின் பிரிவு 2 வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வெளிநாடுகளில் உள்ள மலேசிய தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டும் என கூட்டரசு சட்டத்தின் பிரிவு 7 வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அரசாங்கம் விவேகமாக செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
ஆகையால் வெளிநாடுகளில் உள்ள மலேசிய தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கடந்த செப்டம்பரில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ள சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹாருன், தமது முடிவை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஐநா மனித உரிமை மன்றத்தில் ஒரு இடத்தை மலேசியா வெற்றி பெற்றுள்ளது குறித்து அரசாங்கத்திற்கு கெராக்கான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெற்றி நாட்டிற்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம். இதற்கேற்ப மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என டத்தோ டோமினிக் நினைவுறுத்தினார்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *