English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் அக் 16
ஐநா சபையில் மனித உரிமைகள் மன்றத்தில் ஒரு இடத்தை வென்றால் மட்டும் போதாது என மலேசிய அரசாங்கத்திற்கு பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி நினைவுறுத்தினார்.

மனித உரிமைகள் விவகாரத்தில் மலேசியா பின்னடைந்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
மனித உரிமைகள் மன்றத்தில் ஒரு இடத்தை வென்று விட்டோம் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மார் தட்டிக் கொள்ளக்கூடாது என்றார் அவர்.

“ஐநா சபையில் ஒரு இடத்தை வென்றதற்காக ஒரு மலேசிய என்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மனித உரிமைகள் விவகாரத்தில் இந்நாடு மோசமான தரநிலையில் இருக்கின்றது”என்றார் அவர்.

மனித உரிமைகள் விவகாரத்தில் மோசமான பதிவைக் கொண்டுள்ள மலேசியா, மனித உரிமைகள் குறித்து உலக நாடுகளுக்கு என்னதான் கற்றுத்தரப்படுகிறது என ராமசாமி வினவினார்.

மனித உரிமைகள் விவகாரத்தில் மோசமான தரநிலையை கொண்டுள்ள நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் இடம்பெற்றுள்ளது வேதனை அளிப்பதாக அவர்
சுட்டிக்காட்டினார்.

இந்நாடு சுதந்திரமடைந்தது முதல் இன மற்றும் மத பிரிவினை வாதத்தில் தான் செயல்பட்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.

 32 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *