English Tamil Malay

ரொம்பின் அக் 15
எதிர்வரும் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு மஇகா ரொம்பின் தொகுதியினருக்கு முன்னாள் மஇகா தேசிய மகளிர் அணி தலைவி டத்தோ மோகனா முனியாண்டி நாடு தழுவிய நிலையில் வேஷ்டி மற்றும் புடவைகளை அன்பளிப்பு செய்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் மஇகா ரொம்பின் தொகுதி செயலாளர் தேவன், தொகுதியின் மகளிர் அணி தலைவி வனிதா மற்றும் ராஜலட்சுமி ஆகியோரிடம் வேஷ்டி மற்றும் புடவைகளை டத்தோ மோகனா முனியாண்டி அன்பளிப்பு செய்தார்.

மஇகா ரொம்பின் தொகுதி குடும்பத்தினருக்கு இந்த அன்பளிப்பு விநியோகிக்கும் படி டத்தோ மோகனா கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மஇகா தேசிய மகளிர் அணி துணைத் தலைவி விக்னேஷ்வரி பாபுஜி, மத்திய செயலவை உறுப்பினர் கிருஷ்ணவேணி மற்றும் பகாங் மஇகா மகளிர் அணி தலைவி இன்பவல்லி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் மஇகா தேசிய மகளிர் அணி தலைவி பதவிக்கு டத்தோ மோகனா முனியாண்டி போட்டியிடுகிறார்.
நாடு தழுவிய நிலையில் மகளிர் அணியினர் டத்தோ மோகனாவிற்கு வற்றாத ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 194 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *