English Tamil Malay

கிள்ளான் அக 15-தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா முகமது சாதிக், கோவிட் -19 தொற்று நோய் காலக்கட்டத்தின் போது ஏழை இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த மலேசிய இந்திய காங்கிரஸின் (எம்ஐசி) கீழ் இயங்கும் ஆராய்ச்சி குழுவிற்கு மில்லியன் கணக்கில் நிதி வழங்கியுள்ள தகவல் தற்போது பரப்பரப்பாகியுள்ளது.

குறிப்பாக,தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ், மித்ரா அல்லது மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவிலிருந்து யயாசன் மூலோபாய சமூகம் எனும் வாரியத்திற்கு RM9.1 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இங்கே எழும் கேள்வியே, ஒரு ஆராய்ச்சி மையம் ஏன் ஆன்லைன் கல்வி வகுப்புகளை நடத்துகிறது? ஏழை மாணவர்கள் பெரும்பாலோர் மடிக்கணினி வசதி இல்லாமலும் அல்லது இணையத்தை அணுக முடியாதபோது இது அர்த்தமற்றது என தெளிவாகிறது என்றார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

நாடாளுமன்றத்தில் இதனை பற்றி வினாவிய போது, ​​MIC பணம் பெற்றதா என்பதை பற்றி ஹலிமா இன்னும் உறுதி செய்யவில்லை என்றாலும் அதன் தலைவர் விக்னேஸ்வரன் சனசி, அந்த நிதி 18,000 மாணவர்களை சென்றடைந்ததாக கூறுகிறார்.

சிவில் சமூக அமைப்புகள் மூலம் பணம் வழங்க பட வேண்டும் என தெளிவாக கூறப்பட்டிருந்தும், ஏன் ஒரு அரசியல் கட்சியைப் பயன்படுத்த வேண்டும்? ஜூம் எனும் இணையத்தள வகுப்புகளுக்காக ஏன் மில்லியன் கணக்கில் நிதி தேவைப்படுகின்றது? இதற்கு மேல், யயாசனுக்கு கல்வியில் நிபுணத்துவம் இல்லை.

மித்ராவின் நிதி எவ்வாறு செலவிடப்பட்டன என்பது பற்றி எழுப்பப்பட்ட எங்களின் சட்டபூர்வமான கேள்விகளுக்கு ஹலிமாவின் பதில்கள் இரண்டுதான். ஒன்று எங்களை ஊழல் எதிர்ப்பு நிறுவனத்திடம் புகார் செய்யுமாறு சொல்வது இல்லையெனில் அரைச்ச மாவை அரைப்பது போல் அந்த நிறுவனம் காலதாமதமான கடன்களை அடைக்க பயன் படுத்தியதாக கூறுவது.

இவர் மீது இன்னும் சில குற்றச்சாட்டுகள் உள்ளன. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு நிதி சென்றடையவில்லை என்பதால் 6000 ஏழை இந்திய குழந்தைகள் வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை, மற்றும் குறைந்தபட்சம் 550 ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன என விளக்கினார் சார்ல்ஸ்.

இந்த அமைச்சர் சர்ச்சைக்கு புதியவர் அல்ல. தொற்றுநோய் காலக் கட்டத்தின் போது ஏழைகளுக்கு உதவி கூடைகள் வழங்கப்பட்ட உண்மையான மதிப்பு பற்றி விளக்க நிறைய உள்ளது. காட்டப்பட்ட மொத்த செலவு RM12.4 மில்லியன் ஆகும். அதுமட்டுமல்ல, MIC க்கு இன்னும் பல வழிகளில் பணம் வழங்கப்பட்டதாக பல தகவல்கள் கூறுகின்றன.

இந்த பொது நிதிகளின் ஓட்டத்தைக் காட்ட ஹலிமா சரியான கணக்கு வழக்குகள் மற்றும் ஆவணங்கள் கொண்டிருக்கலாம். எனவே, நான் கேட்பது அவரிடம் ஒன்றுதான். ஆதாரங்களை காட்டுங்கள் என்பதுதான்.

இந்தியரின் வறுமையை ஒழிக்கத்தான் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், எங்கள் கோரிக்கைகளிலிருந்து எங்களால் பின்வாங்க முடியாது பின்வாங்கவும் மாட்டோம் . ஆகவே, நிழல் விளையாட்டை நிறுத்தி விட்டு எங்களுக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார் சார்ல்ஸ்.

 164 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *