English Tamil Malay

ஜோர்ஜ்டவுன் அக் 15
பத்து பூத்தே தீவு மீதான ஆட்சித் தலைமை உரிமை இழந்தது தொடர்பாக ஒரு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒரு பல்லில்லாத பணி படை குழு நமக்கு தேவை இல்லை. குறிப்பாக நஜிப் ரசாக் நிர்வாகத்தில் இருந்த முன்னாள் சட்டத்துறை தலைவர் அப்பான்டி அலி இந்த குழுவில் இடம்பெறக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து அனைத்துலக நீதிமன்றத்திற்கு ஒரு ஆக்ககரமான மேல்முறையீட்டு பரிந்துரையை ஏன் செய்யவில்லை என்பதற்கு அப்பான்டி தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தில் ஒரு ஆக்ககரமான மேல்முறையீட்டு விண்ணப்பத்தை மலேசியா சமர்ப்பிக்க தவறியதால் கடந்த 2008 மே 23 ஆம் தேதி தனது தீர்ப்பில் அனைத்துலக நீதிமன்றம் பத்து பூத்தே தீவு மீதான ஆட்சித் தலைமை உரிமையை சிங்கப்பூருக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பம் வாபஸ் பெறப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தான் பொறுப்பேற்க வேண்டும் என் அவர் சாடினார்.
ஆகையால் இந்த விவகாரம் மீதான பணி படை குழுவிற்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஏன் முகமட் அப்பான்டியை நியமிக்க வேண்டும் என ராமசாமி கேள்வி எழுப்பினார்.

 42 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *