English Tamil Malay

காஜாங் அக் 14
நமது இந்திய பெண்கள் சிறு தொழில்கள் செய்வதன் மூலம் தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும் என பிகேஆர் புக்கிட் காஜாங் பாரு கிளையின் தலைவர் கேரன் கஸ்தூரி கூறினார்.

கோவிட் 19 தாக்கத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த காலகட்டத்தில் நமது இந்திய பெண்கள் சிறு தொழில்களில் கவனத்தை செலுத்தலாம் என்றார் அவர்.

கடந்த அக்டோபர் 10 ஞாயிற்றுக்கிழமை இங்கு தாமான் வெஸ்ட் கண்டறி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வளாகத்தில் பிகேஆர் காஜாங் தொகுதி ஏற்பாடு செய்த இலவச மருதாணி பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இந்த பயிற்சி பட்டறையை சிலாங்கூர் பிகேஆர் மகளிர் அணி தலைவி ரொட்ஷியா இஸ்மாயில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பெண்களுக்கு எப்படி மருதாணி போடப்படும் என்பது குறித்து வரைபடம் மூலம் இந்த பட்டறையில் கற்றுத் தரப்பட்டது.
பிறகு கைகளில் எப்படி மருதாணி போடுவது என்பது குறித்தும் தெளிவாக கற்றுத் தரப்பட்டது.
தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வரும் இந்த காலகட்டத்தில் இந்த பயிற்சியில் கலந்துகொண்ட பெண்கள் வருமானத்தை பெற இது ஒரு வாய்ப்பு என கஸ்தூரி குறிப்பிட்டார்.

இந்த பயிற்சிப் பட்டறையில் 18 வயது முதல் 35 வயது உட்பட்ட 35 பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும் இவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பயிற்சி பட்டறையில் பிகேஆர் சிலாங்கூர் மகளிர் அணி துணை தலைவி ரோஷானா ஜைனால் மற்றும் பிகேஆர் மகளிர் அணி மத்திய செயலவை உறுப்பினர் ராய்ஹான் அப்துல் ரஹீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை தந்த வெஸ்ட் கண்றியை சேர்ந்த வி. புஷ்பவதி உட்பட அனைத்து தரப்பினருக்கும் தாம் நன்றி கூறுவதாக கேரன் கஸ்தூரி கூறினார்.

 312 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *