English Tamil Malay


ஜோர்ஜ்டவுன் அக் 13
பத்து பூத்தே தீவை சிங்கப்பூரிடம் இழந்ததற்கு துன் மகாதீரைவிட வேறு யாரும் காரணமாக இருந்திருக்க முடியாது என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியதில் உண்மை இருக்கலாம் என பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி. ராமசாமி கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புத்ராஜெயா வை பாக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றிய போது பத்து பூத்தே தீவு மீதான வழக்கின் மறு ஆய்வு விண்ணப்பத்தை வாபஸ் பெறும்படி மகாதீருக்கு யார் ஆலோசனை வழங்கியது என நேற்று முகநூலில் நஜிப் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விண்ணப்பத்தை வாபஸ் பெறும்படி கடந்த 2018 மே 28 ஆம் தேதி அனைத்துலக நீதிமன்றத்திற்கு பாக்காத்தான் ஹராப்பானின் நிர்வாகம் கடிதம் எழுதி இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2017 பிப்ரவரியில் தேசிய முன்னணி அரசாங்கம் மறு ஆய்விற்கு விண்ணப்பம் செய்து இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில் அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மேல்முறையீட்டுக்கு அதிகமான கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மகாதீருக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ராமசாமி குறிப்பிட்டார்.

 50 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *