English Tamil Malay

ஜொகூர் பாரு அக் 11
மலேசியாவின் 11 மேம்பாட்டு திட்டங்களில் இதுவரை வறுமை ஒழிக்கப்படவில்லை என பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த நிலையில் கால தாமதத்திற்கு பிறகு கடந்த வாரம் 12 ஆவது மலேசிய திட்டம் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 11 மேம்பாட்டு திட்டங்களில் நாம் எதையும் சாதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் என்றார் அவர்.

11 ஆவது மலேசிய திட்டத்தில் நாட்டில் வறுமை ஒழிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் தனது இலக்கை அடையவில்லை என்பதுதான் உண்மை.
மெத்தன பொருளாதார வளர்ச்சி, அரசாங்க இலாக்காக்களில் ஊழல், ஆவண மற்ற அந்நிய தொழிலாளர்கள்,

இன ரீதியிலான கொள்கைகள், இனவாதம் போன்ற விவகாரங்களில் மலேசியா இன்னும் சிக்கிக்கொண்டு தான் இருக்கிறது.

இன அடிப்படையிலான கொள்கைகள், இனப்பாகுபாடு போன்ற விவகாரங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பரவலான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் அன்மையில் பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் அரசாங்கம் செய்துகொண்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சில மாற்றத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சி மற்றும் நிலை தன்மைக்கு துணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

 36 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *