English Tamil Malay

பெக்கோக் அக் 10
முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தின் லாபிஸ் கிளைக்கு வெ 5,000 நன்கொடையை வழங்க பாக்காத்தான் ஹராப்பான் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். ராமகிருஷ்ணன் உறுதி அளித்தார்.

நேற்று ச்சாவில் உள்ள தமது சட்டமன்ற அலுவலகத்திற்கு லாபீஸ் கிளையின் செயலவை உறுப்பினர்கள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
சுமார் 350 உறுப்பினர்களை கொண்ட லாபிஸ் கிளையின் வளர்ச்சி குறித்து இவர்கள் தம்மிடம் விளக்கம் அளித்ததாக அவர் சொன்னார்.

இதனை தொடர்ந்து அந்த கிளையின் வளர்ச்சிக்கு 5,000 வெள்ளி நன்கொடையை வழங்க தாம் உறுதி அளித்ததாக முன்னாள் ஜொகூர் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.

வரும் செவ்வாய்க்கிழமை இந்த தொகைக்கான காசோலை செயலவை உறுப்பினர்களிடம் வழங்கப்படும் என்றார் அவர்.

 201 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *